கோவை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது..!

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் 1026 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 795 பகுதிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் 1026 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 795 பகுதிகள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாகக் குறைந்து கொண்டே வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3000-க்கும் கீழ் சென்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், மாநகராட்சியில் மருத்துவ முகாம், பரிசோதனைகள் அதிகரிப்பு, வீடுகள் தனிமைப்படுத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பாக கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரகப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக் கண்டறியப்படும் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தெருக்களில் 3 வீடுகளுக்கு மேல் இருந்தால் அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் தற்போது 795 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 580 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பிறகு துடியலூரில் 48 பகுதிகளும், காரமடையில் 37 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திலேயே குறைவாக கிணத்துக்கடவில் எந்தப் பகுதியும் தனிமைப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து நோய்த் தொற்றுப் பரவல் குறைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்' என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...