கோவை: கிடுகிடுவென உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வால்பாறையில் மத்திய அரசுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒருபகுதியாக, இன்று ஸ்டேட் பேங்க் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு வால்பாறை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் தலைவர் குசலவன் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 'பெட்ரோல் டீசல் விலையைக் குறை... விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து... கேஸ் விலையைக் குறைத்திடு... மக்களைக் காக்க காங்கிரஸ் தேவை' என வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தலைவர் குசலவன். பிரபாகரன் வழக்கறிஞர் சுப்ரமணியன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.