நீலகிரி: உடன் பணிபுரியும் பெண் காவலர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நீலகிரி கூடுதல் எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி: உடன் பணிபுரியும்பெண் காவலர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நீலகிரி கூடுதல் எஸ்.பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாக பணியாற்றி வருபவர் சார்லஸ். இவர் இதற்கு முன் ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவில் பணியாற்றினார்.
அப்போது போலீஸ் துறையில் பணியாற்றும் பெண் போலீசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், சார்லஸ் தவறிழைத்த தற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து தற்போது நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி.,யாக இருக்கும் சார்லசை சஸ்பெண்ட் செய்து, கூடுதல் முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டார்.
கோவை டி.ஐ.ஜி., வாயிலாக, நீலகிரி எஸ்.பிக்கு வந்த உத்தரவு நேற்று சார்லஸிடம் வழங்கப்பட்டது. உத்தரவின்படி, தற்போது பணியில் இருக்கும் நீலகிரி மாவட்டத்திலேயே கூடுதல் எஸ்.பி., தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசு அனுமதி இல்லாமல் வேறு எங்கும் செல்லக்கூடாது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள கூடுதல் எஸ்.பி., சார்லஸ், கோவை, பொள்ளாச்சி, பவானி உள்ளிட்ட இடங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.