கோவை: கோவை புலியகுளம் பகுதியில் திமுக சார்பில் "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில், திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நான்காண்டுகளுக்கு முன்பு மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் கால தாமதம் ஆவது குறித்து அப்போதைய மாநில அரசும், மத்திய அரசும் மாறி மாறி பொய் மட்டுமே கூறி வந்தனர் என்று குற்றம் சாட்டினார்.
வெகுவிரைவில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக, அவர் தெரிவித்தார்.