கோவையில் வனக்கொள்ளைகளை தடுக்க வனத்துறையில் களம் இறங்கும் நாட்டு நாய்கள்!

கோவை: கோவையில் வனக்கொள்ளைகளை தடுக்க வனத்துறையில் நான்கு நாட்டு நாய்கள் வனத்துறையில் இணைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் வனக்கொள்ளைகளை தடுக்க வனத்துறையில் நான்கு நாட்டு நாய்கள் வனத்துறையில் இணைக்கப்பட்டுள்ளன.

காவல்துறையில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் பயிற்சி பெற்ற நாய்கள் முக்கிய பங்கு வகிப்பது போல கடந்த 26 ஆண்டுகளுக்கு முன்பு கூட வன குற்றங்களை கண்டுபிடிக்க பயிற்சி பெற்ற நாய்கள் பயன்படுத்தப்பட்டது.

அதன்பிறகு பல ஆண்களாக வனத்துறையில் மோப்ப நாய்கள் அவ்வளவாக பயன்படத்தபடவில்லை. இந்நிலையில் இப்போது கோவை கோட்டத்திற்கு உட்பட்ட வனத்துறையில் பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஜெர்மன் ஷெப்ப்ர்ட், டால்மேசன், லேப்பரடார் போன்ற வெளிநாட்டு இன நாய்களை போல் தமிழக நாட்டு நாய்களான சிப்பிபாறை,கோம்பை போன்ற வேட்டை நாய்களும் திறமையானவை.

தமிழக நாட்டு நாய்களை பயன்படுத்தும் நோக்கத்துடன், சிப்பிபாறை நாயை வனத்துறையில சேர்த்துள்ளனர். கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு ஒரு நாயும் ஆழியார் வனக்கோட்டத்திற்கும், கூடலூர் மற்றும் நீலகிரிக்கு தலா ஒரு நாயும் என 4 நாட்டு நாய்களை வனத்துறையில் இணைத்துள்ளனர்.

நாட்டு நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வனத்தில் கஞ்சா பயிரிடுவதை கண்டுபிடிக்கவும் சந்தன மரங்களை வெட்டி கடத்துபவர்களை கண்டுபிடிக்கவும் மொத்தத்தில வன கொள்ளைகளை கண்டுபிடிக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாய்க்கு ஒரு பயிற்சியாளர், ஒரு உதவி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிப்பிபாறை நாய்களுக்கு, அதிகாரிகள் தமிழ் பெயர்களை சூட்டியுள்ளனர். கோவையில் உள்ள நாய்க்கு வலவன் என அழகிய தமிழ் பெயரை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக வன அதிகாரி செந்தில் கூறுகையில், “வன குற்றங்களை தடுக்கவும் வன குற்றவாளிகளை பிடிக்கவும் இந்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டு நாயான சிப்பிபாறையை தேர்வு செய்து இணைத்துள்ளோம். கோவையில் உள்ள நாய்க்கு வலவன் என்ற பெயர் வைத்துள்ளோம். வலவன் என்றால் வலது கரம் போன்றவன் துணிச்சலானவன் நம்பிக்கையானவன் என்று பொருள்.

அதேபோல் மற்ற பகுதியில் உள்ள நாய்களுக்கு கடுவன், காளிங்கன்,அகவை என தமிழ் பெயர்கள் சூட்டியுள்ளோம். வலவனுக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் வன குற்றங்களை கண்டுபிடிக்க முடியும், வன குற்றங்கள் குறையும்,” என்றார்.

வலவனின் பயிற்சியாளர் மணிகண்டன் கூறுகையில்,” சிறிய குட்டியில் இருந்து வலவனை எடுத்து வந்து கடந்த 4 மாதங்களாக பயிற்சிகள் அளித்துள்ளோம். வன கொள்ளையர்கள் கஞ்சா போன்றவை எடுத்து சென்றாலோ கஞ்சா பயிரிடப்பட்டாலோ,சந்தன மரங்கள் கடத்தினாலோ மோப்பம் பிடித்து குற்றவாளியை கண்டுபிடித்து விடும் திறன் பெற்றுள்ளது,” என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...