கோவை: அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் முன்களப்பணிக்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம் கூறியிருப்பதாவது:
“தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தொற்று பாதிப்பு ஏற்பட்ட வீதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட குப்பைகளை அகற்றுவது, கிருமிநாசினி தெளிப்பது என துப்புரவு பணியாளர்கள் முன்களப்பணியாளர்களாக அனைத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையில் பணியை தொடங்கி, கொரோனா நோய் தொற்றும் அச்சத்துக்கு இடையே மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இத்தகை பணிகளில் ஈடுபடும் சுகாதார துப்புரவு பணியாளர்களை ஊக்கத்தொகைக்கான பட்டியலில் பரிந்துரை செய்ய வேண்டாம் என உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் தெரிவிப்பதாக தகவல்கள் வருகின்றன. இது துப்புரவு பணியாளர்கள் மத்தியில் பதற்றம் மற்றும் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், மிகப்பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது. எனவே, அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் முன்களப்பணிக்கான ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.