கோவை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில், கொரோனா தொற்று 2வது அலையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிணத்துக்கடவு பேரூராட்சி சார்பில் வீடு வீடாகச் சென்று சளி மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்ய குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கு 30 பேர் கொண்ட ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பேரூராட்சி ஊழியர்கள் இன்று வீடு வீடாகச் சென்று ரத்தப் பரிசோதனை சளி-இருமல் ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதனை செய்து பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணியை ஆய்வு செய்த கிணத்துக்கடவு பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.