கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தினமும் 4500 பணியாளர்கள் வீடாக வீடாகச் சென்று சளி, காய்ச்சல் இருக்கிறதா என்று சோதனை செய்கின்றனர். பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் ஆக்சிஜன் கண்டறியும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நஞ்சுண்டாபுரத்தில் கடந்த 10 நாட்களில் 650 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் 56 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 56 பேர் வசிக்கும் பகுதி உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, பாதிக்கப்பட்டோரின் நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவமனையில் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்தியும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "நஞ்சுண்டாபுரத்தில் வீடுகள்தோறும் சென்று அங்கு வசிகிக்கும் மக்களுக்கு காய்ச்சல், இருமல், சளி மூச்சுத்திணறல், மயக்கம், அதிக சோர்வு மற்றும் வயிற்றுபோக்கு இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படுகிறது. நோய் அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து யாரும் வெளியில் வராமல் கண்காணிப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தினமும் 3 முறை கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது," என்றார்.