கோவை: பெட்ரோல், டீசல் விலையை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோவையில் இளைஞர் காங்கிரஸார் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை இன்னும் சில நாட்களில் லிட்டருக்கு 100 ரூபாய் என்ற உச்சத்தை தொட உள்ளது. பெட்ரோலிய பொருட்கள் விலையை கட்டுபடுத்த தவறிய மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.
அதன் படி கோவையில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன் தலைமையில் உப்பிலிபாளையம் பெட்ரோல் பங்க் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுபடுத்த தவறிய மத்திய பாஜ.க அரசை கண்டித்து இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி மாலை அணிவித்து, மலர் தூவி விநோத முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இளைஞர் காங்கிரசார், “இந்த ஆண்டில் மட்டும் 43 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிலிண்டர் உள்ளிட்ட எரி பொருட்களின் விலை ஏறி வருவதால், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுபடுத்த மத்திய அரசு தவறி விட்டது,” என குற்றம் சாட்டினர்.
ஆர்ப்பாட்டத்தில் இமயம் ரகமத்துல்லா, சம்சுதீன், ஜான்சன், சிக்கந்தர், தனபால், அருண் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.