கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஓவ்வொரு ஆண்டும் ஜீன் 12-ம் நாள் சர்வதேச குழந்தைத் தொழிலாளா் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாளை அரசு விடுமுறை என்பதால் கோயம்புத்தார் மாநகராட்சி விக்டோரியா ஹால் வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.
குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்கான உறுதிமொழி ஏற்புக்கு மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையேற்றார்.

“இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன்.
அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணாவு ஏற்படுத்துவேன். தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்,” என்ற உறுதிமொழியினை மாநகராட்சியின் அனைத்து அலுவலாகளும், பணியாளாகளும் ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.