கோவை: பெட்ரோல் விலையை கட்டுப்படுத்தாத மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி வந்து காங்கிரஸ் கட்சியினர் நூதனமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை இன்னும் சில நாட்களில் லிட்டருக்கு 100 ரூபாய் என்ற உச்சத்தை தொட உள்ளது. பெட்ரோல் விலையின் உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்கின்றன.
பெட்ரோல் விலையேற்றத்தை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.

அதன் படி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக அவினாசி சாலையில், அண்ணா சிலை அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி இழுத்து வந்து நூதன முறையில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதே போல டி.எஸ்.பி.அலுவலகம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹரிஹரசுதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆண்டில் மட்டும் 43 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து ஏறி வரும் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாக இளைஞர் காங்கிரசார் குற்றம் சாட்டினர்.
இதே போல கோவையில் பல்வேறு இடங்களில்,நடைபெற்ற போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெரும் அளவில் பங்கேற்றனர்.