கோவை: கோவை அருகே கோயிலில் அம்மனை வணங்குவது போல் நடித்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை அபேஸ் செய்து கொண்டு ஓடிய ஆசாமியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை: கோவை அருகே கோயிலில் அம்மனை வணங்குவது போல் நடித்து அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை அபேஸ் செய்து கொண்டு ஓடிய ஆசாமியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் நீலிகோணம்பாளையததில் அம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மன் கோயிலில் இன்று காலை ஒரு நபர் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார்.
பின்னர் கோயிலுக்கு ஆட்கள் வருவது குறைந்ததால் பூசாரி கோயிலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது கோயிலுக்குள் சாமி கும்பிடுவது போல் நின்று கொண்டிருந்த மர்மநபர் அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நழுவ முயன்றார்.
மீண்டும் கோவிலுக்குள் வந்த பூசாரி அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அப்போது அந்த மர்மநபர் கோயிலை விட்டு வெளியே செல்ல முயன்றார்.
அப்போது பூசாரி திருடன் திருடன் என சத்தம் போட்டு அந்த வாலிபரை துரத்தி பிடித்தார்.அருகில் இருந்த பொதுமக்களுக்கும் சுற்றி வளைத்து அந்த நபரை பிடித்தனர்.
பின்னர் அந்த நபரை விசாரித்தபோது அம்மன் கழுத்தில் இருந்த நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் குறித்து பொது மக்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (38 )என்பது தெரியவந்தது .மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.