கோவை: கோவையில் வீட்டு உரிமையாளரின் மனைவி மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வாடகைதாரரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெயினுலாபுதீன் என்பவரின் மனைவி கதீஜா (48). இவரது வீட்டில் அப்துல்லா என்பவர் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் மனைவி கதிஜா குறித்து அவர்கள் வீட்டில் வாடகைதாரராக குடியிருந்த அப்துல்லா என்பவர் சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவுகளை வெளியிட்டதாக தெரிகிறது.
இதுபற்றி கேள்விப்பட்ட கதிஜா அதிர்ச்சியடைந்து அப்துல்லாவிடம் கேட்டுள்ளார் .அப்போது அப்துல்லா, கதீஜாவை தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்துல்லா மீது கதீஜா போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸில் புகார் அளிக்கப்பட்டதை அறிந்த அப்த்துல்லா தலைமறைவாகி விட்டார். .புகாரின் பேரில் போலீசார் அப்துல்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.