வால்பாறையில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

வால்பாறை: வால்பாறையில் பொள்ளாச்சி எம்பி நிதியில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


வால்பாறை: வால்பாறையில் பொள்ளாச்சி எம்பி நிதியில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைக்க பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தனது தொகுதியில் இருந்து ரூ.33 லட்சம் ஒதுக்கினார்.

அதன்படி ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் அமைக்கும் பணிகள் அண்மையில் முடிவடைந்தது. இந்நிலையில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்தார்.



கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி இயந்திரத்தை துவக்கி வைத்தார். மேலும் ஆனைமலை தேயிலை உற்பத்தி யாளர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிசன் செறிவூட்டிகளை மருத்துவமனைக்கு அர்ப்பணித்தார்.

விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், தேயிலை தோட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...