கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவண்டியில் நின்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது .
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாலக்காடு ரோடு மற்றும் கோவை ரோடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் முன்பு மாட்டுவண்டியில் நின்று நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்கள் பெரும் பாதிக்கப்படுவார்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது என்று கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.