கிணத்துக்கடவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கிணத்துக்கடவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கிணத்துக்கடவில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, இன்று கிணத்துக்கடவு செக்போஸ்ட் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு கிணத்துக்கடவு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு வட்டார தலைவர் வித்யாசாகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், விவசாய அணி தலைவர் ரத்தினசாமி, நகர பொருளாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...