திருப்பூர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17ஆயிரம் ஆக கட்டுப்படுத்தபட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊராட்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியதாவது;
“கொரோணவில் இருந்து மக்களை காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது. அதனால்தான் மற்ற பணிகளை குறைத்து கொண்டு கொரோனா பணிகளுக்காக இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 37ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இப்போது பாதிப்பு எண்ணிக்கை 17ஆயிரம் ஆக கட்டுப்படுத்தபட்டுள்ளது.
தமிழக முதல்வர் கோட்டையில் இருந்து உத்தரவு போடாமல் நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார். குறிப்பாக கோவையில் அரசு மருத்துவமனையில் கொரோன சிகிச்சை பிரிவில் உள்ளவர்களை நேரில் சென்று பார்வையிடார். இது அவரின் மனித நேயத்தை எடுத்து காட்டுகிறது. தற்போது நகரங்களை தாண்டி கிராம பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. எனவே கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகம் விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும். தமிழகத்துக்கு அதிக தடுப்புசிகளை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். வெளி நாடுகளில் இருந்தும் தடுப்பூசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோன இறப்பு குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நாமும் ஏரியில் போய் தெர்மாகோல் தான் விட வேண்டும்.”
இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.