கோவையில் ஊரடங்கை மதிக்காமல், பைக்கில் ஊர் சுற்றுவோருக்கு கொரோனா பரிசோதனை!

கோவை: கோவையில் ஊரடங்கை மதிக்காமல், பைக்கில் ஊர் சுற்றுவோரை தடுத்து நிறுத்தி, கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: கோவையில் ஊரடங்கை மதிக்காமல், பைக்கில் ஊர் சுற்றுவோரை தடுத்து நிறுத்தி, கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல், கடந்த சில நாட்களாக குறைந்து வந்தாலும், தமிழக அளவில் மற்ற இடங்களை ஒப்பிடும்போது, பாதிப்பு இன்னும் அதிகமாகவே இருக்கிறது. அதேபோல், கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் கோவையில் அதிகமாக உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கக் கூடாது என்பதற்காக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி, பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இதனால் கோவை நகரெங்கும் வாகன போக்குவரத்து அதிகமாகி விட்டது. பைக் மற்றும் கார்களில் பொதுமக்கள் இங்கும் அங்கும் செல்ல ஆரம்பித்து விட்டனர். முக்கியமான சந்திப்புகளில், சிக்னல்களை இயக்கி, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டிய அளவுக்கு வாகன இயக்கம் பெருகி விட்டது. இதனால், எந்தவித காரணமும் இன்றி ஊரடங்கை மதிக்காமல் ஊர் சுற்றுவோரை நிறுத்தி, சளி மாதிரி சேகரித்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள, மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து வாகன சோதனை சாவடிகள் அருகில் முகாமிட்ட மாநகராட்சி சுகாதாரத்துறையினர், அவ்வழியாக பைக்கில் வந்த அனைவரையும் நிறுத்தி, சளி மாதிரி சேகரித்தனர். இதேபோல், அனைத்து பிரதான சாலைகளிலும், நடமாடும் பரிசோதனை வாகனங்களை நிறுத்தி, சோதனை நடத்த சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...