கோவையில் ரோந்தில் ஈடுபட்ட போலீசாரிடம் போதையில் தகராறு செய்த நபர்கள் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ வைரல்!

கோவை: கோவையில் ரோந்தில் ஈடுபட்ட போலீசாரிடம் போதையில் தகராறு செய்த நபர்கள் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.


கோவை: கோவையில் ரோந்தில் ஈடுபட்ட போலீசாரிடம் போதையில் தகராறு செய்த நபர்கள் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பொது ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் சூலூரில் இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு கண்ணம்பாளையம் பகுதியில் மது போதையில் 3 பேர் சாலையில் திரிந்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் அவர்களை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தினர். ஆனால், போதையில் இருந்த மூவரும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர் மேலும் காவல்துறையினரை தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போலீசார், அவர்கள் மூவரும் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ், தீபக், பிரகாஷ் என்பது தெரியவந்தது.

கள்ளத்தனமாக மது பாட்டில்களை வாங்கி வந்து மது அருந்தியது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் மது போதை தெளிந்தவுடன் தாங்கள் செய்த தவறுக்காக வருந்தினர். போலீசாரிடம் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிந்துள்ளனர்.

காவல்துறையினர் பணிக்கு இடையூறு செய்தது தவறு எனவும் மதுபோதையில் இதுபோன்ற தவறுகளை செய்ததாகவும் காவல்துறையினரின் பணியை மதிப்பதாகவும் வீடியோவில் மூவரும் கூறியுள்ளனர். தற்போது இந்த வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...