கோவை: கொடுக்கல் வாங்கல் தகராறில் தருமபுரியில் கடத்தப்பட்ட சிறுவனை கோவையில் போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கோவை வடவள்ளியை சேர்ந்த சரவணக்குமார் என்பவருக்கும் தருமபுரியைச் சேர்ந்த மோகனாம்பிகை என்பவருக்கும் இன்ஸ்ட்டாகிராம் மூலம் பழக்கம் எற்பட்டது.
மோகனாம்பிகை கார் வாங்குவதற்காக சரவணக்குமாரிடம் 1.5 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை திருப்பி கொடுக்க வில்லை.
இதனால், தருமபுரி சென்ற சரவணக்குமார், மோகனாம்பிகையின் 7 வயது மகனை தூக்கி கொண்டு கோவை வந்துவிட்டார். மகனை சரவணக்குமார் கடத்தி விட்டதாக மோகனாம்பிகை தருமபுரி போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் கோவை வந்த தருமபுரி போலீசார் வடவள்ளி போலீசார் உதவியுடன் சரவணக்குமாரை கைது செய்து சிறுவனை மீட்டனர். சரவணக்குமாரை தருமபுரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். சிறுவனை தாயிடம் போலீசார் ஒப்படைத்தனர்.