பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்.!

கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன முறையில் ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நூதன முறையில் ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை விரைவில் ரூ.100ஐ எட்ட உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்தநிலையில், இன்று நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி தலைவர் ராஜா உசேன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



அரசு கலால் வரியை உடனே திரும்பப் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...