கோவை: பிரபல நகைக்கடை நிறுவனமான கீர்த்திலால் சார்பில் கோவை மாநகர கொரோனா தொற்றுத் தடுப்பு பணிகளுக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள், 10,000 ஹெல்த் கேர் கிட்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன.
கோவை: பிரபல நகைக்கடை நிறுவனமான கீர்த்திலால் சார்பில் கோவை மாநகர கொரோனா தொற்றுத் தடுப்பு பணிகளுக்காக ஆக்சிஜன் செறிவூட்டிகள், 10,000 ஹெல்த் கேர் கிட்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் அரசுக்கு உதவிகள் செய்து வருகின்றன. இந்த நிலையில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பத்தகுந்த இந்தியாவின் பிரபலமான கீர்த்திலால் தங்க நகை நிறுவனம் கோவை மாவட்ட மக்களுக்காக கொரோனா தொற்று தடுப்பு உபகரணங்களை வழங்க முடிவு செய்தது.

இதையடுத்து கீர்த்திலால் நிறுவனத்தின் இயக்குனர் சூரஜ் சாந்தகுமார், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் பி. குமாரவேல் பாண்டியனிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஹெல்த் கேர் கிட்களை வழங்கினார். பல்வேறு கிராமங்களில் உள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தடுப்பு மருந்துகளுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கருவியை நிறுவனம் விநியோகித்துள்ளது. தென்னிந்தியா முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ தேவைகளையும் நிறுவனம் வழங்கியுள்ளது. நிறுவனம் 3,000 க்கும் மேற்பட்ட ஆரோக்கியமான சிறுதானிய உணவு பாக்கெட்களை வெவ்வேறு இடங்களில் நன்கொடையாக வழங்கியது. மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை உருவாக்குவதில் நிறுவனம் பங்கேற்றுள்ளது.
இது தவிர பாரதியார் பல்கலைக்கழகத்தில் 1,000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையத்தை உருவாக்கி கல்வித் துறையிலும் நிறுவனம் பங்கேற்றுள்ளது. "கீர்த்தலால்களும் அவர்களது ஊழியர்களும் பெண்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்று, தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில் சமூகத்திற்கு சேவை செய்வதில் அரசாங்கத்துடனும் மக்களுடனும் கைகோர்த்து வருகின்றனர்."