கோவை: கோவையில் 15 நண்பர்கள் இணைந்து 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் மெஷின்களை வழங்கியுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த 15 நண்பர்கள் ஒன்றிணைந்து, தங்களால் முடிந்த நிதி உதவியை வழங்கி மொத்தம் 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் இயந்திரங்களை வழங்கியுள்ளனர்.
நண்பர்கள் குழுவைச் சேர்ந்த, ராமகிருஷ்ணன், ‘‘நாங்கள் 15 பேர் சிறு வயது முதல் நண்பர்களாகவே இருந்து வருகிறோம். பாப்பநாயக்கன்பாளையம் மணி பள்ளியில் தொடங்கிய எங்கள் நட்பு கல்லூரியிலும் தொடர்ந்தது. பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் எஸ்.என்.ஆர் கலை அறிவியல் கல்லூரி என இரு கல்லூரிகளில் படித்தோம். இருப்பினும் எங்கள் நட்பு தொடர்ந்தது. கல்லூரிப் படிப்பு முடித்து
நான் உள்ளிட்ட அனைத்து நண்பர்களும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறோம்.
கொரோனா நோய் தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில். எங்கள் நண்பர்கள் குழு சார்பில் ஏதேனும் மக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்ட உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்கு அதிக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஏதேனும் நலத்திட்ட உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். இதன்படி 4 ஆரம்ப சுகாதார நிலையங்களும், கோவை அரசு மருத்துவமனை என மொத்தம் ஐந்து இடங்களில் தானியங்கி சுத்திகரிப்பு (Hot, Cold, Normal)குடிநீர் விநியோகிக்கும் இயந்திரத்தை இன்று வழங்கியுள்ளோம்.

இதற்காக ஒவ்வொருவரும் தங்களுடைய பங்களிப்பை செலுத்தியுள்ளோம். ஒரு இயந்திரத்தின் விலை 10 ஆயிரம் ரூபாய். மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் வசூலித்து, இந்த மெஷின்களை வாங்கி, உப்பிலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், உடையாம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், பீளமேடு, பயனீர் மில் ரோடு ஆரம்ப சுகாதார நிலையம், விளாங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றுக்கு இன்று மெஷின்களை வழங்கியுள்ளோம். நாளை காலை கோவை அரசு மருத்துவமனைக்கு ஒரு மெஷினை வழங்க உள்ளோம்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நாங்கள் அளித்த இந்த உதவியை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ ஜெயராம் நேரில் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். எதிர்வரும் நாட்களிலும் மேலும் சில உதவிகள் செய்ய திட்டமிட்டுள்ளோம். நாங்கள் இந்த செய்தியை பகிர்வது எங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு அல்ல. இதுபோன்று பலரும் மக்கள் சேவைக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த செய்தியைப் பகிர்கிறோம்'' என்று கூறினார்.