இக்கரை போளுவாம்பட்டி வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை தர வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

கோவை: இக்கரை போளுவாம்பட்டி வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.


கோவை: இக்கரை போளுவாம்பட்டி வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சியில் 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஒன்பது பேர் நேற்று பணி முடித்து குப்பை அள்ளும் பேட்டரி வாகனத்தில் வீடு திருப்பிய போது, நொய்யல் பாலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



இந்தநிலையில், டாக்டர் அம்பேத்கர் மாநில மாநகராட்சி மற்றும் நகராட்சி துப்புரவு சங்கப் பணியாளர்கள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் சமூக நீதிக் கட்சித் தலைவர் பன்னீர் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் சமூக நீதிக் கட்சித் தலைவர் பன்னீர், ‘‘எவ்வித பாதுகாப்பும் இன்றி துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் குப்பை அள்ளும் வாகனத்தில் தூய்மைப் பணியாளர்களை அழைத்துச் சென்றது தவறு என்றவர் இது மனித உரிமை மீறல் செயல்'' என குற்றம் சாட்டினார்.

மேலும், ‘‘பழுதடைந்த வாகனத்தில் அழைத்து செல்லபட்டதே இந்த விபத்திற்கு காரணம்'' என்றவர், ‘‘இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...