கோவை: வால்பாறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு திடீரென வருகைபுரிந்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

வருகிற 11ஆம் தேதி வால்பாறை பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில், வால்பாறைக்கு இன்று வருகை தந்த பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வால்பாறையில் உள்ள ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வால்பாறையில் சுமார் 80 ஆண்டுகள்ஆகிய நிலையில், பள்ளி பாரமரிக்கப்படாமலும் மேல் கூரை ஆங்கங்கே உடைந்து மழை நீர் வகுப்பு அறையில் வரும் நிலையில் இருக்கிறது.

இந்தநிலையில், ஆய்வு மேற்கொண்ட அமைச்சரிடம், பள்ளியின் நிலையை தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் விளக்கிக் கூறினார். அதோடு, அமைச்சர் உடனடியாக பள்ளி மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்தநிகழ்வில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை பொறுப்பாளர் பால் பாண்டி மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே.பாஸ்கர், மாணவர் அணி மாகுடிஸ்வரன், சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.