ஆக்சிஜன் மீட்டர் உள்ளிட்ட கருவிகள் வழங்கி உதவும்படி தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்!

கோவை: தன்னார்வலர்கள் ஆக்சிஜன் மீட்டர் உள்ளிட்ட கருவிகள் வழங்கி உதவும்படி பொள்ளாச்சி சார் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: தன்னார்வலர்கள் ஆக்சிஜன் மீட்டர் உள்ளிட்ட கருவிகள் வழங்கி உதவும்படி பொள்ளாச்சி சார் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், பேரூராட்சி பகுதிகளில் நோய் தொற்றை கட்டுப்படுத்த பொள்ளாச்சி சார்-ஆட்சியர் வைத்திநாதன் கோவை மாவட்டத்தில் பேரூராட்சிகள் சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக கூடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள 37 பேரூராட்சிகளில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா நோய் பாதிப்புகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புகளை கண்டறியும், ஆக்சிஜன் மீட்டர், உடல் வெப்ப பரிசோதனை கருவி உள்ளிட்ட பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.



பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், தன்னார்வலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை ஊழியர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.



ஆலோசனைக் கூட்டத்தில், பேசிய சார் ஆட்சியர் வைத்திநாதன், கோவை மாவட்டத்தில் உள்ள 37 பேரூராட்சிகளிலும் நோய்த் தொற்றை கண்டறிய, 3000 ஆக்சிஜன் மீட்டர் , தர்மோ மீட்டர் உள்ளிட்ட கருவிகள் தேவைப்படுகிறது.

கோவையை சேர்ந்த சந்திரசேகர் மற்றும் ரவீந்திரன் ஆகிய இரண்டு தன்னார்வலர்கள் 100 ஆக்சிஜன் மீட்டர்களை வழங்கியுள்ளனர்.



உடனடியாக பணிகளை தொடங்க இன்னும் கருவிகள் தேவைப்படுவதால், தன்னார்வலர்கள் முன்வந்து உதவ வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...