கோவையில் டெலி மெடிசன்‌ மூலம் சிகிச்சை அளிக்க மொபைல் செயலி தொடக்கம்!

கோவை: கோவையில் டெலி மெடிசன்‌ மூலம் சிகிச்சை அளிப்பதற்கான மொபைல் செயலியை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.



கோவை: கோவையில் டெலி மெடிசன்‌ மூலம் சிகிச்சை அளிப்பதற்கான மொபைல் செயலியை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு உத்தரவு அமலில்‌ கொரோனா தொற்று தவிர பிற சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரையோ அல்லது மருத்துவமனைகளுக்கோ செல்வதற்கு இயலாத நிலை உள்ளது.

இந்த சிரமங்களை கருத்தில்‌ கொண்டும்‌, கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுதலை தடுக்கும்‌ வகையிலும்‌ கோவை மாநகராட்சியின்‌ சார்பில்‌ தனுஷ்‌ ஹெல்த்கோ நிறுவனத்துடன்‌ இணைந்து டெலி மெடிசன்‌ மூலம்‌ சிகிச்சை அளிக்க CBECORP VMed என்ற ஆன்ட்ராய்டு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலியை பயன்படுத்தி பொதுமக்கள்‌ தங்களுக்கு தேவயான சிகிச்சையை அதற்குரிய மருத்துவர்களிடம் காணொலி மூலம்‌ (Video Call) 24 மணிநேரமும்‌ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்‌.

கொரோனா தொடர்பான அறிகுறிகள்‌ உள்ள நபா்கள்‌ இச்செயலி மூலம்‌ மருத்துவரிடம்‌ ஆலோசனை பெறும்பொழுது சம்பந்தப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மருத்துவர்‌ கேட்டறிந்து அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருப்பின்‌ அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலா்கள்‌ மூலம்‌ ஏற்பாடு செய்யப்படும்‌.

இதன்‌ மூலம்‌ முதியோர்கள்‌, குழந்தைகள்‌ மற்றும்‌ காப்பிணி பெண்கள்‌ ஆகியோர்‌ தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை எந்தவித சிரமமின்றி வீட்டிலிருந்தே பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

CBECORP VMed செயலியை http://qrgo.page.link/sby6R என்ற இணையதள முகவரி மூலம்‌ பொதுமக்கள்‌ பதிவிறக்கம்‌ செய்து தங்கள்‌ தொலைபேசி எண்னை உபயோகித்து பதிவு செய்து கொள்ளலாம்‌.

பொதுமக்கள்‌ இச்செயலியை பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி நகர்‌ நல அலுவலர்‌ மரு.ராஜா, தனுஷ்‌ ஹெல்த்கோ நிறுவன ஆலோசகர் கே.ஜெயக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி

அலுவலா்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...