கோவை மாநகராட்சி பகுதியில் வீடு வீடாக ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பணியில் 4,500 பணியாளர்கள்..!

கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பணியில் 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பணியில் 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் தற்போது 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில், 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர். கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாநகராட்சியில் ஒரு வீதியில் 3 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த வீதி தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாநகராட்சி பகுதியில் 651 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘‘கோவை மாநகராட்சி பகுதியில் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வீடு, வீடக்ச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை செய்வதுடன், பொதுமக்களின் ஆக்சிஜன் அளவைக் கண்டறியும் பணியில் 4 ஆயிரத்து 500 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம்.

இவர்களில் ஒரு நபர் குறைந்தது 50 வீடுகளில் சோதனை மேற்கொள்வார். சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதன் முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், 14 நாட்களுக்கு வெளியே வரக்கூடாது என்று கண்டிப்பாகத் தெரிவித்து உள்ளோம். அவர்களைக் கண்காணிக்கும் பணியில் மநாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்'' என்று தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...