கோவை: வால்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஆக்சிசன் உற்பத்தி நிலைய பணிகளை நகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரூபாய் 33 லட்சம் செலவில் ஆக்சிசன் உற்பத்தி இயந்திரம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வால்பாறை நகராட்சி புதிய ஆணையாளர் சுரேஷ் அவர்கள் வால்பாறை அரசு மருத்துவமனையை பார்வையிட்டார். ஆக்சிசன் உற்பத்தி நிலைய பணிகளையும் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தியுடன் அடிப்படை வசதிகள் பற்றி கேட்டறிந்தார். மருத்துவமனை பகுதியில் திறந்து கிடக்கும் கால்வாய்களுக்கு மூடி போடவும் வெளிப்புறங்களில் தளம் அமைக்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இந்த ஆய்வில் ஆணையாளர் சுரேஷ், பொறியாளர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி, நகர செயலாளர் பால்பாண்டி, இளைஞரணி மகுடீஸ்வரன், பொறியாளர் அணி சத்தியமூர்த்தி உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.