கோவை: கிணத்துக்கடவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ஊர்சுற்றியவர்களின் 150 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சாலைகளில் திரியக்கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
போலீசார் எச்சரிக்கையை மீறி கிணத்துக்கடவு பகுதியில் முழு ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றியவர்களின் 150க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு வழக்கும் பதிவு செய்துள்ளனர். எனவே தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வெளியே சுற்ற வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.