கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86-க்குட்பட்ட செல்வபுரம் நகாப்புற ஆரம்ப சுகாதார மையத்தை மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார்.

பொதுமக்களுக்கு அளிக்கும் சிகிச்சை முறைகள் குறித்து செவிலியாகளிடம் கேட்டறிந்த பின்னர், வார்டு எண்.76 முத்துசாமி காலனி பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியிருக்கும் வீடுகளை பார்வையிட்டார். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கின்றதா எனவும், தினசரி களப்பணியாளர்கள் வருகின்றார்களா என்பது குறித்தும் ஆணையர் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமினை ஆணையர் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல் கண்டறியும் முறைகள், பல்ஸ் ஆக்ஸி மீட்டா மூலம் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் முறைகள், தொமா மீட்டா மூலம் வெப்ப அளவினை கண்டறியப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், வார்டு எண்.97 அன்னை இந்திரா நகர் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.