கோத்தகிரியில் காட்டு யானை தாக்கி ஆதிவாசி இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காட்டு யானை தாக்கி ஆதிவாசி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் காட்டு யானை தாக்கி ஆதிவாசி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செம்மணாரை ஆதிவாசி கிராமத்தில் வசித்து வருபவர் இருளர் இனத்தை சேர்ந்த இளைஞர் ராஜ்குமார்.

இவர் அருகில் உள்ள தல மொக்கை கோவிலுக்கு சென்று விட்டு செம்மணாரையில் உள்ள அவரது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.



அப்போது புதரில் மறைந்திருந்த காட்டு யானை அவரை தாக்கியுள்ளது. இதில் தலை, இடுப்பு, பகுதிகளில் பலத்த காயமடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வனத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.



இறந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதற்கட்டமாக ரூ.50,000 நிதி உதவி வழங்கப்பட்டது. யானை தாக்கி இளைஞர் இறந்த சம்பவம் ஆதிவாசி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...