கோவை: கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்தநிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அடிக்கடி தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுகிறது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி இருப்பு வந்ததால் 600-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் கடந்த இரண்டு நாட்களாக நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.