பொள்ளாச்சி: கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே ரயில் மின்மயமாக்கல் பணியில் கம்பிகளை சீரமைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி- கிணத்துக்கடவு- போத்தனூர் இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு வழியாக போத்தனூர் வரையிலான ரயில் பாதையின் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்பங்கள் நடப்பட்டு மின்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது.

கம்பங்களில் பொருத்தப்பட்ட மின் கம்பிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர் நவீன ரயில் இயந்திரம் மூலம் ஊழியர்கள் மின் கம்பிகளை ஒரே அளவாக இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா தொற்று காரணமாக ரயில்கள் இயக்கப்படாத காரணத்தால் மின்மயமாக்கல் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என ரயில்வே துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.