பொள்ளாச்சியில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை தீவிரம்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

தமிழகத்தில் கோவை மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.

பொள்ளாச்சியில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நகராட்சி சார்பில் தற்காலிக பணியாளர்ளைக் கொண்டு வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் படி சார் ஆட்சியர் வைத்திநாதன் உத்தரவிட்டார்.



இதையடுத்து இன்று பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பணியினை நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் தொடங்கி வைத்தார்.



நகராட்சி பகுதியில் தற்காலிக பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனைக்கு அழைத்து செல்வது, தொற்று உறுதி செய்யப்பட்டால் சிகிச்சைக்கு அனுமதிப்பது, போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் கணக்கெடுப்பு பணி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை, உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளதா என்பதையும் கணக்கெடுக்கப்பது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...