கோவையில் 4 மாதங்களுக்கு முன் மாயமான 16 வயது மகளை கண்டுபிடித்துத் தரக்கோரி தாய் மனு!

கோவை: கோவையில் 4 மாதங்களுக்கு முன் மாயமான தனது 16 வயது மகளை கண்டுபிடித்து தரக்கோரி விஜயலட்சுமி எனும் பெண் எனும் பெண் மாநகர காவல் ஆணையரடம் புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவையில் 4 மாதங்களுக்கு முன் மாயமான தனது 16 வயது மகளை கண்டுபிடித்து தரக்கோரி விஜயலட்சுமி எனும் பெண் எனும் பெண் மாநகர காவல் ஆணையரடம் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;

கோவை பி.கே.புதூர் பகுதியை சேர்ந்த நான், கணவனை பிரிந்து மகளுடன் வசித்து வருகின்றேன். எனது 16 வயது, மகள் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன் கல்லூரி சென்ற என் மகள் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகளை காணவில்லை என விஜயலட்சுமி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தேன்.



மாயமான மகள் ஆந்திராவில் இருப்பதாகவும், அங்கிருந்து செல்போனில் என்னை அழைத்தார். அதன் பின் நீண்ட நாட்களாக தொடர்பு கொள்ளவில்லை. என் மகளுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. 4 மாதம் ஆகிய நிலையில் அவர் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்பது கூட தெரியவில்லை.

மேலும் எனது மகளை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவா என்ற இளைஞர் கடத்தி சென்று விட்டார். அவர் மீது துடியலூர் போலீசில் அதிக புகார்கள் உள்ளன. உடனடியாக எனது மகளை மீட்டு தர வேண்டும்.”

இவ்வாறு விஜயலட்சுமி புகாரில் கூறியுள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...