சூலூர் அருகே சட்டவிரோதமாக வேனில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட 1,870 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை: சூலூர் அருகே சட்டவிரோதமாக வேனில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட 1,870 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.



கோவை: சூலூர் அருகே சட்டவிரோதமாக வேனில் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்ட 1,870 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சூலூர் அருகே மாரியப்பன் தேவர் வீதியில் செவ்வாய்க்கிழமை மாலை வேனில் ரேஷன் அரிசியை கொண்டு வந்து ஒருவர் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சூலூர் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார் அவ்விடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, போலீசார் அந்த இடத்திற்கு வருவதை கண்ட உடன் அரிசி விற்பனையில் ஈடுபட்டிருந்த ரைஸ் ராஜா என்ற நபர் அரசி கொண்டு வந்த வேனுடன் அரிசியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினார்.

இதையடுத்து, அங்கிருந்த 36 மூட்டை (1,870 கிலோ) ரேஷன் அரிசியையும், அரிசி கொண்டுவந்த வேனையும் போலீசார் சூலூர் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். இது சம்பந்தமாக வேனின் உரிமையாளரான சின்ரு (31) மற்றும் வேனின் ஓட்டுநரான தினேஷ்(23) என்பவரை சூலூர் காவல் நிலையத்துக்கு பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இது சம்பந்தமாக சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ரைஸ் ராஜா என்பவரை தேடி வருகின்றனர். அரிசி மற்றும் வேலை பொள்ளாச்சியில் உள்ள உணவு கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக சூலூர் காவல் ஆய்வாளர் முருகேசன் தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...