கோவை நஞ்சுண்டாபுரத்தில் ஒரே வீதியில் 50 பேருக்கு கொரோனா..! வீதிக்கு சீல்..!

கோவை: நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள வீதியில் சுமார் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீதியே சீல் வைக்கப்பட்டுள்ளது.


கோவை: நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள வீதியில் சுமார் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த வீதியே சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கொரோனா பாதிப்பில் தமிழக அளவில், தொடரர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சமீபத்தில், ஒரு வார காலமாக சற்றே கோவையில் மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இதை உறுதி செய்யும் விதமாக, கோவையில் கொரோனா பாதிப்பு22 சதவிகிதம் குறைந்திருப்பதாகசுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இறப்பு விகிதம் சென்னையை விட அதிகம் இருப்பது, மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.





கோவை மாநகராட்சி பகுதிகளில் பரவும் தொற்றின் விகிதம் கணிசமாக குறைந்து வந்தாலும், மாநகராட்சி மற்றும் சுகாதார துறையினர் இணைந்து வீதிவீதியாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இன்று நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள மேற்கு புதூர் பகுதியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக, 658 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 50 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வீதிக்கே சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...