ஆனைமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது - 1250 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

கோவை: ஆனைமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், 1250 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: ஆனைமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், 1250 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆனைமலை காவல்நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமையில், ஆனைமலை எல்.ஆர்.டி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள், ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பாபு என்கிற சாந்து முகமது, கோகுலகிருஷ்ணன் மற்றும் கோயில் பாளையத்தை சேர்ந்த பிரபாகரன், சரவணகுமார், பிரகாஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், இருசக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் சுமார் 1250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த கஞ்சா, ரூ.5,500 பணம், மொபைல் போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...