கோவை மாவட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய முட்டுக்கட்டை... முன்னாள் அமைச்சர் ஆட்சிரியரிடம் புகார்..!

கோவை: கோவை மாவட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரொனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகள் செய்யும் போது தடுத்து நிறுத்தப்பட்டு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொரொனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகள் செய்யும் போது தடுத்து நிறுத்தப்பட்டு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட அதிமுக சார்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் இன்று கோவை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜனிடம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘‘கோவை மாவட்ட அதிமுக சார்பில் 25 ஆக்ஸிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்'' என தெரிவித்தார்.

மேலும், ‘‘அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொரொனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகள் செய்யும் போது தடுத்து நிறுத்தப்படுகின்றது. மொண்டாமுத்தூரில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனத்தை காவல் துறை தடுத்து நிறுத்துகின்றனர். சூலூரில் காய்கறி விநியோகம் செய்ய அனுமதி மறுக்கின்றனர். கவுண்டம்பாளையம் தொகுதியில் பொது மக்களுக்கு உதவிகள் செய்ய அனுமதி மறுக்கப்படுகின்றது'' என குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘சட்டமன்ற உறுப்பினர்கள் உதவிகள் செய்யும் போது அவற்றை தடுத்து நிறுத்தி திமுகவினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்'' என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று அதிகம் இருக்கின்றது என கூறிய அவர், ‘‘பாசிட்டிவ் கேஸ்களை நெகட்டிவ் என்று சொல்லி அனுப்புகின்றனர். பாசிட்டிவ்வாக இருந்து சிகிச்சை பெற்று இறந்த பின்னர் அதை நெகட்டிங் என சான்றிதழ் கொடுப்பதால், அவர்களால் உதவித்தொகைகூட பெற முடியாத நிலை இருக்கின்றது. மேலும் ஊசிபோடுமிடம், ரேஷன் கடைகளில் எல்லாம் திமுகவினர் தலையீடு இருக்கின்றது. இவற்றை தட்டிக்கேட்டால் பொய் வழக்குகள் போடுகின்றனர்.

கோவை மாவட்டத்தில் ஆய்வுப்பணிகள் நடந்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் கூப்பிடுவதில்லை. கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தூண்டுதலில் போடப்படும் பொய் வழக்குகளை காவல் துறை நிறுத்திக் கொள்ள வேண்டும்'' எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...