கோவையில் சீட்டு விளையாட்டில் தகராறு... ஒருவருக்கு கத்திகுத்து மூன்று பேர் கைது..!

கோவை: கோவை உக்கடம் பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை உக்கடம் பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் சம்பந்தப்பட்ட 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, உக்கடத்தை அடுத்த கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பாலாஜி(32 ). இவர் நேற்று தனது வீட்டின் முன்பு நண்பர்களுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பாலாஜி தனது செல்போனை பணயமாக வைத்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. பாலாஜி தனது செல்போனை போட்டியில் தோற்றதால் அவரது நண்பர்கள் வாங்கி வைத்துக் கொண்டனர்.

ஆனால், பாலாஜி செல்போனை மீண்டும் தன்னிடம் தருமாறு உடன் விளையாடியவர்களிடம் கூறினார். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். இது இரு தரப்பினரிடையே தகராறாக மாறியது. தகராறு முற்றிய நிலையில், பாலாஜியை அவரது நண்பர்கள் தாக்கத் தொடங்கினர். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால் தலையில் குத்தினர். இதில் படுகாயமடைந்த பாலாஜியை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து பாலாஜி அளித்த புகாரின் பேரில் கத்தியால் குத்திய கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் பிரகாஷ் (32) மற்றும் அவரது தந்தை செல்வராஜ் (55) மற்றும் அவரது சகோதரர் துரைராஜ் (42) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...