கோவை: கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து சீரழித்த சித்தப்பா உள்ளிட்ட இரண்டு நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் சிறுமியை பலாத்காரம் செய்து சீரழித்த சித்தப்பா உள்ளிட்ட இரண்டு நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெல்லித்துறை பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்தச் சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில், அடிக்கடி குடித்துவிட்டு வரும் சிறுமியின் சித்தப்பாவான முருகேசன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமி வேலை பார்க்கும் இடத்தில் டைல்ஸ் ஒட்டும் பணிபுரிந்த சம்பத் என்ற வாலிபரும் சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அந்தச் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவரது சித்தப்பா முருகேசன் மற்றும் தொழிலாளியான சம்பத் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.