கடன் தருவதாக கூறி ஏடிஎம் பின் நம்பரை பெற்று மோசடி செய்த பொள்ளாச்சி இளைஞர் நால்வர் கைது!

கோவை: குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக ஆசை காட்டி ஏ.டி.எம்.கார்டுகளின் ரகசிய எண்களை பெற்று மோசடி செய்த பொள்ளாச்சி இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தருவதாக ஆசை காட்டி ஏ.டி.எம்.கார்டுகளின் ரகசிய எண்களை பெற்று மோசடி செய்த பொள்ளாச்சி இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகாசி தேன் காலனி பகுதிய சேர்ந்த மோகன்தாஸ்(58) என்பவர் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு மைக் செட் கட்டும் தொழில் நடத்தி வருகிறார்.

அண்மையில் இவரை சந்தித்த அசோக் என்ற நபர் திருவாரூரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் தலைமை அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

பைனான்ஸ் அலுவலகத்தின் மூலம் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக தெரிவித்த அவர், ஆதார் அட்டை விவரங்கள் மற்றும் ஏ.டி.எம்.கார்டு பின் நம்பர் தெரிவித்தல் போதும், நேரில் வர தேவையில்லை என்றும் ஆசை காட்டியுள்ளார்.

அதை நம்பிய மோகன்தாஸ் 5 லட்சம் ரூபாய் கடன் பெற விண்ணப்பித்தார். அவரது உறவினரான பட்டாசு தொழிலாளி சக்திவேல் என்பவர் ரூ3 லட்சமும், ஆட்டோ ஓட்டுநர் லிங்கராஜ் ரூ1 லட்ச ரூபாயும் கடன் பெற முன் வந்தனர்.

கடனுக்கான செயலாக்க கட்டணமாக மூவரும் சேர்ந்து 80 ஆயிரம் ரூபாயை அசோக்கின் வாங்கி கணக்கில் கட்டினர் . ஆனால் அதன் பின் அசோக்கிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அவரது கைபேசியும் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர்தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மூவரும் மாறனேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரின் விருதுநகர் பொருளாதார குற்றபிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த டேவிட் ராஜ, அசோக் என்ற பட்டாலராஜ், ராஜ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகிய 4 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

கடன் பெற முன்வருபவர்களின் வங்கி கணக்கில் பணம் இருந்தால் அதனையும் சுருட்டும் நோக்கிலேயே ஏ.டி.எம்.கார்டுகளின் பின் நம்பர்களை கேட்டு பெற்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

சிவகாசியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த கும்பல் கைவரிசையை காட்டியுள்ளதால் இந்த வழக்கின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

மோசடி கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி ஆதார் கார்டு விவரங்களையோ அல்லது ஏ.டி.எம்.கார்டுகளின் பின் நம்பரையோ யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று பொதுமக்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...