கோவை அருகே பேட்டரி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலி, 7 பேர் படுகாயம்!

கோவை: கோவை அருகே தூய்மைப் பணியாளர்கள் பயணித்த பேட்டரி கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் 7 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவை அருகே தூய்மைப் பணியாளர்கள் பயணித்த பேட்டரி கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் 7 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;

இன்று மதியம் 1.40 மணி அளவில் இக்கரை போளுவம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட துப்புரவு பணியாளர்கள் 9 பேர் பணியை முடித்துவிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பேட்டரி வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.



இக்கரை போளுவம்பட்டியில் உள்ள பாலத்தில் செல்லும் போது பேட்டரி வண்டி வலது பக்கமாக தலைகீழாக சாய்ந்ததில் இக்கரை போளுவாம்பட்டியை சேர்ந்த பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் செம்மேடு, காந்தி காலனியைச் சேர்ந்த மருதன் மகன் பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார்.

ராசு, பெரியசாமி, மாரிமுத்து, அம்மாசை, செல்வி, மாரிமுத்து, கமலம், அருக்காணி ஆகிய ஏழு பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...