கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், கோவை அருகே அரசு விதிமுறையை மீறி செயல்பட்ட மில்லுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தடை உத்தரவு நேற்று முதல் பல்வேறு தளர்வுகள் உடன் செயல்பட தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதனையடுத்து 50 சதவிகித தொழிலாளர்களை மட்டுமே வைத்து தனியார் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்திருந்தது. இந்தநிலையில், கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் அதிக பணியாட்களை வைத்து நூற்பாலை இயங்குவதாக சூலூர் வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சூலூர் வட்டாட்சியர் சகுந்தலாமணியின் அறிவுறுத்தலின் பேரில் பீடம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் வசந்தபாலன் மற்றும் சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தனியார் நூற்பாலைக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர்.