கோவை மாநகராட்சியில் வியாபாரிகளுடன் ஆணையாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கோவை மாநகராட்சியில் வியாபாரிகளுடன் ஆணையாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கோவை மாநகராட்சியில் வியாபாரிகளுடன் ஆணையாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகக் கூட்டரங்கில்‌ மொத்த மளிகை, அரிசி வியாபாரிகள்‌, இராமர்‌ கோயில்‌ மொத்த காய்கறி வியாபாரிகளுடனான ஆலோசனைக்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தலைமையில்‌ நடைபெற்றது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மீண்டும் ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ள நிலையில், நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை உதவி ஆணையர்‌ (மேற்கு) மணிகண்டன்‌, மத்திய மண்டல உதவி ஆணையர்‌ சிவசுப்பிரமணியன்‌, செயற்பொறியாளர்‌ ரவிச்சந்திரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி மற்றும்‌ மொத்த மளிகை, அரிசி வியாபாரிகள்‌, இராமர்‌ கோயில்‌ மொத்த காய்கறி வியாபாரிகள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...