கோவை: வால்பாறை அருகே உள்ள கிராமத்தில் யானை தாக்கி இறந்தவர் குடும்பத்திற்கு நிதி உதவியாக ரூபாய் 3.50 லட்சத்தை தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குமாட்டி ஆதிவடி பழங்குடி கிராமத்தில் கடந்த 15.4.21 அன்று யானை தாக்கி இறந்த திருமதி வண்ணத்தாய்க்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு அப்போது 50,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மீதி உள்ள மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை, டாப் சிலிப் பகுதிக்கு ஆய்வு செய்வதற்கு வந்த வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், யானை தாக்கி இறந்த வண்ணத்தாய் மகளிடம் வழங்கினார். அப்போது, ஆனைமலை புலிகள் காப்பகம் கூடுதல் முதன்மை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் ஐ.அன்வர்தின், பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குநர் ஆரோக்கிய ஜேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.