பொள்ளாச்சி: கொரோனா தொற்று ஏற்பட்டால் யானைகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனா காரணமாக பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து தமிழக வனத்துறையினரால் டாப்சிலிப் மற்றும் முதுமலையில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி இன்று பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு, வன கால்நடை மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகளை எடுத்தனர்.
யானைகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோழிக்குத்தி யானைகள் முகாமுக்கு வந்த தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் யானைகளின் கொரோனா பரிசோதனை குறித்து கால்நடை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளின் பாதுகாப்பு கருதி இன்று கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகளில் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் யானைகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.