கோவை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு வலைத்தளம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பதிவினை ஆன்லைனில் புதுப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியபோதும் அதை நிறைவேற்ற முடியாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரிப் பேராசிரியர் புகார் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு வலைத்தளம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கல்லூரி பேராசிரியர் ஜெயசீலன், ‘‘வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 2017 / 18 / 19ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி மூன்று மாதங்களுக்கு மேற்குறிப்பிட்ட மூன்று ஆண்டுகள் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்கள் ஆன்லைனில் பதிவை புதுப்பித்து கொள்ளலாம்.

ஆனால், இதற்கு முயற்சியை மேற்கொண்ட பொழுது தமிழக அரசின் வேலைவாய்ப்பு வலைத்தளம் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தங்கள் பதிவினை ஆன்லைனில் புதுப்பிக்க முடியவில்லை எனவும் பலர் என்னிடம் தெரிவித்தனர். நானும் அந்த வலைத்தளத்தில் முயற்சி செய்தபோது அவர்கள் கூறிய புகார் உண்மை என தெரியவந்தது.

பதிவினைப் புதுப்பிக்க பெயர் மற்றும் பாஸ்வேர்டு சரியான முறையில் பதிவு செய்யும் போதும் அது தவறு என தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் பொழுது வலைத்தளம் பக்கத்தில் உள்ளே செல்ல முடிகிறது ஆனால், பதிவினைப் புதுப்பிக்க டைப் செய்யும் பொழுது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விடுகிறது.
தமிழக அரசு அரிய வாய்ப்பு வழங்கிய போதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவினைப் புதுப்பித்துக் கொள்ள முடியாமல் பலர் பாதிக்கப்பட்டு உள்ளது மிகவும் வருந்தத்தக்கது. உடனடியாக அரசு வேலைவாய்ப்பு வலைத்தளத்தில் உள்ள தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.