வால்பாறை நகராட்சியில் கூடும் பொதுமக்கள் கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம்..!

கோவை: வால்பாறை நகராட்சியில் கூடும் கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை நகராட்சியில் கூடும் பொதுமக்கள் கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக, சுமார் 300க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதனிடையே, வால்பாறை நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், இன்று வால்பாறை நகராட்சி அலுவலக வளாகத்தில் கூடிய கூட்டத்தால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வால்பாறை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள சத்துணவு மைய அமைப்பாளர் மற்றும் பணியாளர்களுக்குக் குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வழங்கப்பட்டு வருகிறது.

வால்பாறை நகராட்சி அலுவலகத்திற்கு வந்த சுமார் 50 சத்துணவு பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக சமூக இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு நின்றனர். இதன் காரணமாக தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...